top of page

ABIRAMI ANDHATHI (1 to 5)

1. உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமிஎன்றன் விழுத்துணையே.

தமிழ்ப்பொருளுரை

உதிக்கின்ற சூரியனின் சிவந்த கதிர்களைப் போலவும், உச்சித்திலகம் என்கின்ற சிவப்பு மலரைப் போலவும்,  மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், மணம்மிக்க குங்குமம் போன்ற சிவந்த மேனியையும் உடைய வடிவையுடையவள் என் அபிராமியன்னை, மென்மையான தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய  ​பேறு பெற்றவள். மின்னலைப் போன்ற கொடியிடையை உடைய என் அபிராமி அன்னையே எனக்குச் சிறந்த துணையாவாள்.

English Meaning

Abirami's magnificent red color is compared to the rising sun's rays, the beautiful color of the pomegranate buds, and red gems. My mother, Abirami, is also worshipped by the goddess Lakshmi. Her physique is like lightning and fragrant like kungumam. She is my only savior, and she always protects me.

2. துணையும் தொழும்தெய்வ மும்பெற்றதாயும் சுருதிகளின்பணையும் கொழுந்தும் பதிகொண்டவேரும் பனிமலர்ப்பூங்கணையும் கருப்பஞ் சிலையும்மென்பாசாங் குசமும்கையில்அணையும் திரிபுர சுந்தரிஆவது அறிந்தனமே.

தமிழ்ப்பொருளுரை

திரிபுர சுந்தரியே எனக்குத் துணையாகவும், தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் கிளைகளாகவும், வேராகவும், மலர்களாகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசாங்குசமும்  ஏந்தி அருள்பாலிக்கின்றாள். 

English meaning

Thirupura Sundari is my mother, and she always protects me with her presence. She is the root, branch, and flower of the Vedas. She holds arrows made of winter flowers and a sugarcane bow. She also carries an angusam with her. 

3. அறிந்தேன், எவரும் அறியாமறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கேதிரு வேவெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்,
மறிந்தே விழுநர குக்குறவாய மனிதரையே.

தமிழ்ப்பொருளுரை

திருவருளை அடியவர்க்கு வழங்கும் அபிராமி அன்னையே! உன்னை அன்பு செய்யும் அடியார்களை  நாடாமலும், மனதால் கூட அவர்களை எண்ணாமலும் இருந்த காரணத்தால் என் மனமானது நரகத்தில் வீழ்ந்து மனிதர்களையே நாடிக் கொண்டிருந்தது. உன்னையே எண்ணி, உன்னிடம் அடைக்கலமானால் நன்மை கிடைக்கும் என்ற உண்மையை இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். எனவே தீயவழியில் செல்லும் மனிதர்களைப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை அறிந்து உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.

Tamil meaning by Rajathi.G

English meaning

After much soul-searching, I concluded that Mother Abirami is my goddess, my holy mother, and the source of all wisdom. True devotees should only be associated with other true devotees; associating with non-devotees would lead you straight to the fires of hell.

4.மனிதரும்,தேவரும்,மாயாமுனிவரும் வந்துசென்னிகுனிதரும் சேவடிக்கோமளமே,கொன்றை வார்சடைமேல்பனிதரும் திங்களும்பாம்பும் பகீரதி யும்படைத்தபுனிதரும் நீயும்என் புந்திஎந்நாளும் பொருந்துகவே.

தமிழ்ப்பொருளுரை

மனிதர்களும், தேவர்களும், அற்புத முனிவர்களும் பற்றி சரணடையும் திருவடிகளையடைய அபிராமி அன்னையே! நீயும் ,கழுத்தில் பாம்பையும் கொன்றை மாலையையும், தலையில் கங்கையையும், நிலவையும் அணிந்திருக்கும்    சிவபெருமானும் எம் உள்ளத்தில் வீற்றிருப்பீர்களாக!!!

Tamil meaning by Rajathi. G

English meaning

My mind should always think of holy mother Abirami and holy father Shiva, who wears a konrai garland and a snake around his neck, as well as the river Ganges and a cool moon on his head.

People, gods, and sages always bow down to Mother Abirami's lotus feet.

I want to make sure that my holy mother and holy father are always treasured and remembered.

5. பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்(சு)அமு தாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரிபாதம்என் சென்னியதே.

தமிழ்ப்பொருளுரை

முக்காலமும், மூலோகங்களும், மூன்றுத்தொழில்களுமென அனைத்திலும் உறைபவளே!செப்புப்போன்ற அழகிய நகில்களின் பாரத்தை வருந்தித் தாங்கும் கொடியடையினை உடையவளே! பக்தர்களை ஞான நிலைக்கு இட்டுச்செல்லும் மனோன்மணியே! தேவர்களைக் காக்க சிவபெருமான் நஞ்சை அருந்தியபோது அதை அமுதாக்கிய அம்பிகையே!  நீ அமர்ந்திருக்கும் தாமரையை விட மென்மையான உன் திருவடிகளையென் தலைமேல் கொண்டு வணங்குகிறேன்!

Tamil meaning by Rajathi. G

​English meaning

Mother Abhirami is accountable for all three worlds, all three functions (create, preserve, and destroy), and all three timeframes (past, present, and future). She is shown here as a mother with compassion. she made the poison taken by Lord Siva into nectar. I always surrender to her lotus feet!

bottom of page