top of page

41. புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

தமிழ்ப்பொருளுரை

 அன்றே மலர்ந்த குவளை மலர்களைப் போன்ற கண்களையுடைய அபிராமி அன்னையும்,  சிவந்த திருமேனியையுடைய சிவபெருமானும் சேர்ந்து நம்மை ஆட்க்கொள்ளும் பொருட்டு  இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள்  அத்துடன் தமது திருவடிகளை நமது தலை மேல் வைத்தார்கள். இந்த அரும்பெரும்பாக்கியம் நமக்குக் கிடைத்தது முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் தான்.

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Abhirami, the divine mother, graces us with her eyes resembling just-blossomed Lily flowers. She is divinely connected with crimson-hued Lord Shiva and has descended into this world to bestow blessings upon us and bless our presence among devotees. The sacred feet of both Abhirami and Lord Shiva rest upon our heads as a result of our past virtuous deeds.

42. இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி, வேதப் பரிபுரையே.

தமிழ்ப்பொருளுரை

குளிர்ச்சியான மொழிகளையுடைய அபிராமி அன்னையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் உறுதியான மனத்தை ஆட்டுவிக்கின்றது.நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே,வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்ட என் அன்னையே!

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Mother! Your divine and abundant bosoms adorned with a pearl necklace have captivated the heart of  Lord Shiva. Your lower body resembles the hood of a Cobra, and your words bring solace and comfort to your devotees. Your anklets symbolize the essence of the four Vedas. 

43. பரிபுரச் சீறடிப் பாசாங்குசை,பஞ்சபாணி, இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச்சிலைக் கை,
எரிபுரை மேனி, இறைவர் செம்பாகத் திருந்தவளே.

தமிழ்ப்பொருளுரை

சிலம்பினையணிந்த அழகிய திருப்பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே! ஐந்து விதமான மலர்களால் ஆன அம்புகளை ஏந்தியவளே! சிந்தூரம் போன்ற சிவந்த மேனியை உடையவளே! முப்புரத்தை ஆண்ட கொடிய மனத்தையுடையஅசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் சரிபாதியாய் அமர்ந்தவளே என் அபிராமி அன்னையே!

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Mother! Your divine Lotus feet are exquisitely beautiful, graced with tinkling anklets that add to their allure. In your hands, you hold the potent weapons Pasam and Angusam. Around your neck, garlands of five different flowers adorn, symbolizing your connection to the five holy scriptures. Your captivating red complexion radiates charm and grace.

You reside on the left side of Lord Shiva, the destroyer of the cruel giants who once tyrannized the three worlds. With deep reverence and devotion, I bow down and offer my worship to you, seeking your blessings and grace.

44. தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர்தமக் கன்னையும் ஆயினள், ஆகையினால்,
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்,
துவளேன், இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

தமிழ்ப்பொருளுரை

 சங்கரனின் மனைக்கு மங்கலமாக விளங்கும் அபிராமி அன்னையே! சிவனாருக்கு தாயுமானாவள் நீயே! உலகிலுள்ள அனைத்து தெய்வங்களக்கும் உயர்ந்த தெய்வமாக இருக்கின்றாய்.ஆகவே நான் இனி வேறு தெய்வங்களைத் தேடாமல் உனக்கே உண்மையான தொண்டு செய்வேன். 

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Mother! You are the sacred consort of Lord Shiva! In certain moments, You embrace the divine role of being the mother of Lord Shiva. You are seen as more powerful than any other divine being. I will not contemplate any other deity except you, hence, I will serve you with unwavering devotion.

45. தொண்டு செய்யாதுநின் பாதம்தொழாது, துணிந்திச்சையே
பண்டு செய்தார்உளரோ, இலரோ அப் பரி சடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின்வெறுக்கை அன்றே.

தமிழ்ப்பொருளுரை

அன்னையே! உனக்குத் தொண்டு செய்யாமல் , உன் பாதங்களை வணங்காமல், தன் எண்ணப்படி வாழ்ந்த ஞானியர் உளர். அவர்களைப் போல் நான் நடந்தால் நீ வெறுப்பாயோ அல்லது பொறுப்பாயாயென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் அன்னையே! நான் தவறே செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள வேண்டும்.

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Mother! Some of your devotees may have become less devoted to you in the past. I cannot affirm whether I have performed the same action now. I have no idea if I'm on the correct path. Regardless of my error, please forgive me and protect me always.

bottom of page