top of page

46. வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம்அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே,
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவனே.

தமிழ்ப்பொருளுரை

நீலகண்டனின் இடப்பாகத்தில் கலந்த பொன் போன்ற அபிராமி அன்னையே! வெறுப்பதற்குரிய  செயல்களைத் தம் அடியவர்கள் செய்தாலும் அவர்களை ஞானிகள் பொறுத்து அருளியதுண்டு. நான் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும் என்னை பொறுத்தருள வேண்டும்.  நீ பொறுத்தருள்வாயென்ற எண்ணத்தில் உன்னையே சரணடைந்து வாழ்த்தி வணங்குவேன்.

English Meaning

Mother! Pardoning hateful devotees is not a new task for saintly people. Your compassionate nature extends to even those who commit unpardonable sins. As you reside to the left side of the Lord with the blue neck (Lord Shiva), I will always seek your forgiveness and continue to worship your sacred feet.

47. வாழும் படிஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
வீழும்படிஅன்று, விள்ளும்படிஅன்று, வேலை நிலம்
ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

தமிழ்ப்பொருளுரை

 நான் வாழ்க்கையை வாழும்படியான ஒரு உண்மையை கண்டு கொண்டு விட்டேன். அது எளிதாக எவரின் மனதிற்கும் புலப்படாதது.  அது கடல்கள் சூழ்ந்த ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் எட்டாமல் இரவையும் பகலையும் முறையே செய்யும் சுடர்களாகிய சந்திர சூரியர்களுக்கு நடுவே அமைந்து  சுடர்விட்டுப் பிராகாசிக்கின்ற அபிராமி அன்னையேயாகும்!

English Meaning

I've realized the sacred truth that offers delight to my existence. Others, though, may struggle to grasp this truth. Mother Abirami, in essence, exceeds the bounds of the seven seas and eight mountains, existing beyond ordinary boundaries. She radiated her radiance between the sun and the moon.

48. சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

தமிழ்ப்பொருளுரை

குன்றை ஒத்த  சடாமுடியில் ஒளிரும் பிறை அணிந்திருக்கும் சிவபெருமானின் மீது படர்ந்திருக்கும் பச்சைப் பரிமளக் கொடி போன்ற அபிராமி அன்னையே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடுவோர் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை இனிப்பெற மாட்டார்கள்.

English Meaning

Like an evergreen vine, Abhirami delicately encircles Lord Shiva's strong shoulders. Shiva's tufted hair supports the dazzling moon with its brilliant rays on top of the hill. Mother! even a short thought of you frees one from having to reincarnate in a body made of flesh and blood and offers eternal happiness beyond the cycle of life and death.

49. குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து, அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

தமிழ்ப்பொருளுரை

நரம்புக் கருவிகளில் பிறக்கும்  இசையே வடிவான அபிராமி அன்னையே! அடியேனாகிய என்னுடைய உடலிலே இணைந்த உயிரை  எமன்  பறிக்க வரும் போது, நான் அஞ்சி வருந்துவேன். அப்போது அரம்பையரும், தேவமகளிரும் சூழ  வந்து அஞ்சேல் என்று அருள் புரிவாய்!

English Meaning

Abhirami! You manifest as the enchanting music flowing from the stringed instruments. When the God of death, Yama comes to take my life housed within this mortal frame, you must grace me with the presence of heavenly beauties like Ramba. Your divine intervention will assure me not to fear

50. நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே! நீயே உலக நாயகி, பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீயே, . தாமரை போன்ற திருக்கரங்களில் ஐவகை மலர் அம்புகளைத்   . சாம்பவி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி,  வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவமானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்குகின்றோம்,  அதுவே நமக்கு அரணாகயிருந்து காக்கும்.

English Meaning

Abhirami! You reign supreme among the Gods, embodying both the powers of Brahma and Vishnu. Your gracious hand carries five arrows symbolizing your divine potency. Known by various auspicious names like Sambhavi, Shankari, Malini, Varahi, Shyamala, Shoolini and Mathangi. we humbly seek refuge at your Lotus feet, where your divine Grace becomes our fortress, shielding us from all adversities.

bottom of page