top of page

51. அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

தமிழ்ப்பொருளுரை

 திரிபுரத்தை நிலையென்று நினைத்து,யார் மேலும் கருணை என்பதே இல்லாமல் கொடுமைகள் செய்து திரிந்த அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமி அன்னையே! உன்னையே சரணாகதியடைந்தஅடியார்களின் மரண பயத்தை நீக்குவாயாக! மேலும் நிலையற்ற இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுவிப்பாயாக! 

English Meaning

The evil ogres believed their three sacred cities were invincible, and their hearts devoid of mercy. However, Shiva and Vishnu, the divine gods, defeated them with their might. Now, these gods beseech your protection, Oh Abhirami! Your devoted followers, Oh mother, shall neither face death nor be subjected to rebirth on this earthly realm under this vast sky.

52. வையம், துரகம், மதகரி, மா மகுடம்,சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம்உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே! பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே!உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே முற்பிறப்பில் வணங்கியவர்கள், இப்பிறப்பில்  வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் முதலான எல்லா வளங்களையும்  சின்னமாக கொள்வர்.

English Meaning

Abhirami! You are the beloved consort of the God who adorns the crescent moon on his head. Your devoted sages shower you with immense love and reverence, worshipping your divine feet. The sacred presence of your feet is symbolized by the Temple Car, the regal horse, the majestic elephant, the crown adorned with precious gems, the palanquin, and the abundance of gold and strings of lustrous pearls.

53. சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவமில்லையே.

தமிழ்ப்பொருளுரை

அபராமி அன்னையே! மென்மையான இடையில் செம்மையான பட்டும், அழகிய பெரிய நகிழ்களும், முத்தாரமும் , வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைச் சூடிய கன்னங்கரியக் குழலும்,மூன்று திருக்கண்களையும்  கருத்திலே கொண்டு இருப்பவர்க்கு  இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.

English Meaning

For the devotees of Goddess Abhirami, there is no greater penance than meditating on the crimson attire adorning her slender waist, the pearl necklace gracing her divine bosom, the fragrant  flower entwined in her hair, and her three eyes symbolizing spiritual enlightenment.

54. இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பாற் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில், நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

தமிழ்ப்பொருளுரை

வறியவர்கள வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடம் பொருளுக்காகச் சென்று அவமானப்படாமல் இருக்க வேண்டுமானால், தவத்தையே செய்யாத கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்ட திரிபுர நாயகியின் திருவடிகளை வழிபடுங்கள்.

Tamil Meaning: Rajathi.G

English Meaning

Consider Goddess Abhirami with all your heart to prevent humiliation and disrespect from others when you ask for their assistance because of your poverty. All the surrendered souls would be safeguarded by Abhirami, who has kept me from mixing with evil individuals.

55. மின்ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற
அன்னாள், அகமகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு
முன்னாய், நடு எங்குமாய், முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்றில்லையே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையானவள் ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தது போன்ற பேரொளிவடிவானவள். தம் அடியார்களுக்கு அகமகிழ்ச்சியைத் தரும் ஆனந்தவல்லி.  வேதத்தின் ஆரம்பமாகவும், நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள். உலக மக்கள் அன்னையை நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், அதனால் அவளுக்கு ஆகக்கூடியது  ஒன்றும் இல்லையே.

Tamil Meaning: Rajathi.G

English Meaning

The Goddess, like a billion lightning bolts, showers happiness and contentment upon her devotees. Abhirami, you are the beginning, centre, and ultimate essence of the Veda. Whether people hold you in their minds or not, you remain unaffected and continue to bestow your blessings.

bottom of page