56. ஒன்றாய் அரும்பிப், பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன், நெஞ்சினுள ்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்றபெம்மானும், என் ஐயனுமே.
தமிழ்ப்பொருளுரை
அபிராமி அன்னையானவள் முதலில் ஒரே பொருளாகிய பராசக்தியாய் தோன்றி பின் உலகம் முழுதும் பலபல சக்திகளாகி பரந்து விரிந்து நிறைந்து நிற்கிறாள். அவைகளிடத்திலிருந்து நீங்கியும் நிற்கறாள். என் நெஞ்சில் மட்டும் நீங்காமல் நிலைபெற்றிருப்பது அதிசயமாகும். இந்த உண்மையை நன்கு அறிந்தவர்கள், ஆலிலை மேல் பள்ளிகொள்ளும் திருமாலும், சிவபெருமா
Tamil Meaning: Rajathi. G
English Meaning
Mother! You take many shapes because you are Parashakti, the ultimate force. You may be absent or present in various situations, but you are always with me and hold the highest position in my heart. Only Vishnu, who lounges on a Banyan leaf on the day of judgment, and my Lord Shiva know the deeper significance of these occurrences.
57. ஐயன் அளந்தபடி இரு நாழிகொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன்தன் மெய்யருளே.
தமிழ்ப்பொருளுரை
இறைவன் இறைவிக்கு அளந்து கொடுத்த இரு நாழி நெல்லைக் கொண்டு உலகில் உள்ள அனைத்து உயிர்களைக் காத்து அருள முப்பத்தியிரண்டு வகையான அறங்களை முழுமையாக செய்த அன்னை உன்னை அழகிய தமிழால் நான் பாட அருள் புரிந்த நீயே செல்வந்தர்யென்ற ஒரே காரணத்திற்காக ஒருவர் முன் போய் நின்று பொய்யையும், மெய்யையும் கலந்து பாடும் நிலைக்கு என்னை வைத்துவிட்டாயே! இதுவா உன் மெய்யருள்?
Tamil Meaning: Rajathi. G
English Meaning
Mother! When my Lord presented you with two measures of rice, you graciously used that humble offering to sustain the entire world abundantly. However, you also blessed me, your devoted singer, with the gift of sweet and pure Tamil, enabling me to express both truth and untruth as needed in various situations. Is this your divine grace?
58. அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல்நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
தமிழ்ப்பொருளுரை
செந்தாமரை மலரிலும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருக்கும் தாமரை மொட்டைப் போன்ற நகிழ்களையுடைய அன்னையின் கருணை ததும்பும் நின் திருவிழியான தாமரையும், திருமுகத்தாமரையும், திருவடித்தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.
Tamil Meaning: Rajathi. G
English Meaning
Mother! You possess the beauty of Lotus-shaped divine bosoms. You gracefully reside in the Lotus flower that blooms during the dawn, and you also dwell within the Lotus of my mind. In moments of distress, I find solace in nowhere else but in your exquisite Eye-lotus, Face-Lotus, beautiful Hand-Lotus, and your divine Lotus feet.
59. தஞ்சம் பிறிது இல்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.
தமிழ்ப்பொருளுரை
அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் கனைகனைகளையும் கொண்டவளே! உன் திருத்தாள் தவிர வேறொரு தஞ்சம் இல்லையென்று அறிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், உன்னை நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக என்னைத் தண்டிக்காமல் எனக்கு அருள் புரிய வேண்டும். பஞ்சை மிதிக்கவும் நாணும் மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். அது போல நீயும் என்னைத் தண்டிக்காமல் எனக்கு அருள் புரிய வேண்டும்.
Tamil Meaning: Rajathi. G
English Meaning
Mother! You are armed with a cane bow and five flower-tipped arrows. I have no other option but to surrender to you. Despite knowing all of these, intentionally, I do not study or reflect on your heavenly path.
Abhirami! Don't punish me for my mistakes; instead, Bless me!
In this universe, moms with soft, cotton-like feet bear the wrongs done by their children.
Likewise, you should bless me.
60. பாலினும் சொல் இனியாய், பனி மா மலர்ப் பாதம் வைக்க
மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே
தமிழ்ப்பொருளுரை
அபிராமி அன்னையே! பாலைவிட இனிமையான சொற்கற்களை கொண்டவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றை மலரணிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்தின் மீது உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். என்னே உன் கருணை!