top of page

ABIRAMI ANDHATHI (6 to 10)

6. சென்னிய(து) உன்பொன்திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னிய(து) உன் திரு மந்திரம்சிந்துர வண்ணப்பெண்ணே,
முன்னிய நின்அடியாருடன்கூடி முறைமுறையேபன்னிய(து)

என்றும் உன் றன்பரமாகம பத்ததியே.

தமிழ்ப்பொருளுரை

செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய அன்னையே! எப்போதும் என் தலை மேல் இருப்பது உன் செந்தாமரை மலர் போன்ற பாதங்களே! 

என் நினைவில் நிற்பது உன் திருமந்திரம்!

​நான் எப்போதும் கூடியிருப்பது உன்னையே தொழும் அடியார்களுடனே!

​நான் தினந்தோறும் முறையாக பாரயணம் செய்வது உன் மேலான ஆகம நெறியையே!

Tamil meaning by Rajathi ​​

English Meaning

Mother! My head is below your lotus feet, and my heart will always praise you. Red beauty! I always think about and talk about, singing your praise and following your rules with your great followers.

7. ததியுறு மத்திற் சுழலும்என்ஆவி தளர்விலதோர்
கதியுறுவண்ணம்கருதுகண்டாய்கம லாலயனும்
மதியுறுவேணிமகிழ்நனும் மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடி யாய்சிந்துரானன சுந்தரியே.

தமிழ்ப்பொருளுரை

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், திருமாலும், சந்திரனை தலையில் அணிந்திருக்கும் சிவபெருமானும் வணங்கிப்போற்றும் சிவந்த பாதங்களை உடைய செந்தூரம் அணிந்த என் அன்னையே!

 தயிரைக் கடையும் போது மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு தவிக்கின்றது. என் உயிரை  நற்கதியடைவதற்கு எப்போதும் என் அன்னையே நீ அருள் புரிவாயாக!

Tamil meaning by Rajathi G

English Meaning

Mother! shield me from the endless recurrence of birth and death. Like curd being churned between a rod, my life seems to be a constant ebb and flow between birth and death. Brahma, Vishnu, and Shiva all pray to you, thus you're the only one who can keep me safe.

8. சுந்தரி எந்தை துணைவிஎன்பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துரவண்ணத்தினாள்மகி டன்தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத் தாள்மலர்த்தாள் என் கருத்தனவே.

தமிழ்ப்பொருளுரை

சிவந்த திருமேனி உடையவளும், என் தந்தை சிவனின் மனைவியும், மகிஷனை வதம் செய்தவளும்,   நீலி என்னும் கன்னியானவளும், தன்னுடைய கையில் பிரம்மனின் ஒரு தலையைக் கொண்டிருப்பவளும். என் உயிர் கொண்டுள்ள பாசக்கட்டுகளையெல்லாம் என் மீதுள்ள அனபினால் அழித்திட்ட அன்னையே! 

​உன்னையே நான் எப்போதும் என் கருத்தில் கொண்டுள்ளேன்!

Tamil meaning by Rajathi G

English Meaning

My Lord's consort, the goddess who can sever all my bonds, She is the most beautiful red one and will always be young, who vanquished the old ogre Mahishi, She carries Brahma's skull.
Mother! Bless me to never forget your feet.

9.கருத்தனஎந்தைதன்கண்ணன வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன பால்அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும்ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும்அம்மேவந்தென் முன்நிற்கவே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே! என் தந்தை சிவபெருமானின் சிந்தையிலும், திருவிழிகளிலும் நீங்காதிருப்பது பொன்மலையாம் மேருவைப் போன்று பருத்தனவும், அழுத பிள்ளையான ஞானசம்பந்தருக்கு பால் நல்கின உன் திருத்தனங்களே ஆகும். இப்படிப்பட்ட திருத்தனங்களும், அத்திருத்தனங்கள் மேல் தவழும் முத்து மாலையும், உன் அழகிய சிவந்த கரங்களில் ஏந்தியிருக்கும் வில்லும் மலர் அம்பும்,கரும்பும் மற்றும் மயிலிறிகின் அடிப்பாகத்தைப் போன்ற  அழகான புன்முறவல் கொண்ட என் அம்மையே எனக்கு காட்சி தந்து அருள்வாயாக!

Tamil meaning by Rajathi G

English Meaning

You are more important to Lord Shiva than anyone or anything else, so he is concentrating on you. The wailing Gnana Sambantham was nourished by your divine breasts, which are comparable to the summit of Meru. You're the one who's wearing the flower bow and the pearl necklace, and your grin is as bright as the feather on a peacock's tail; I implore you, please let me have the opportunity to see you.

10.  நின்றும்  இருந்தும் கிடந்தும், நடந்தும் நினைப்ப(து) உன்னை
என்றும்வணங்குவ(து)உன்மலர்த்தாள்எழு தாமறையின்
ஒன்றும் அரும் பொரு ளேஅருளே உமை யே இமயத்(து)
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே

தமிழ்ப்பொருளுரை

நான் நின்றாலும், அமர்ந்தாலும்,, படுத்தாலும், நடந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் உன்னையே நினைத்து தியானிக்கின்றேன்.

அறிதற்கு மிக அரிய பொருளே! அருளே உருவான உமையே!  இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே!  வேதத்தின் முழு பொருளே! . நான் என்றென்றும் வணங்குவதும் உன் தாமரை மலர் போன்ற பாதங்களையே யாகும்.

Tamil meaning by Rajathi G

English Meaning

In every possible action — standing, sitting, lying down, and walking — I ponder and worship your lotus-like feet.The one who appeared in the Himalayas is the eternal source of redemption and the personification of happiness.

bottom of page