top of page

71. அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள், பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல், உனக்கென் குறையே

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னை எவருடனும் ஒப்பிடமடியாத  பேரழகானவள். வேதமறைகளில் திருநடம் புரிந்ததால் சிவந்த தாமரைக போன்ற திருவடிமலர்களைப் பெற்றவள். சந்திரனைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி. யாமளை என்னும் அழகிய கற்பகப்பூங்கொம்பான  அபிராமி அன்னை இருக்க, நெஞ்சே! உனக்கு ஏன் குறை

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Indeed, Mother Abirami's beauty is unparalleled, radiating grace and charm that transcends all comparisons. Her feet, crimson-red from gracefully dancing over the sacred Vedas, symbolize her boundless wisdom and divine energy.

With the moon adorning her hair, she bestows her devoted children a calming and protective aura. No harm shall befall her devotees in her presence, for she is the epitome of love, compassion, and divine protection. With Mother Abirami by one's side, all worries are dispelled, and a sense of security and serenity prevails.

72. என்குறை தீரநின் றேத்துகின்றேன், இனி யான் பிறக்கின்,
நின்குறையே அன்றி யார்குறை காண்? இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்,
தன்குறை தீர, எங்கோன்சடை மேல்வைத்த தாமரையே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே! என்னுடைய குறைகள் யாவும் தீர உன் பாதம் சரணடைந்து வணங்குகின்றேன்.  நான் மறுபடியும் பிறவிடுத்தால் என் குறை அல்ல. உன்னுடைய குறையேயாகும். ஆகாயத்தில் தோன்றும் மின்னலை விட மெல்லிய   இடையையுடையவளே! எம் தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!

Tamil Meaning: Rajathi. G

English Meaning

I venerate the divine mother with unwavering devotion. I place my faith in her, knowing that if I were to face the harshness of this world once more, it would be her responsibility, not mine. She is the goddess whose waist resembles the lightning in the sky.

During a time of wrath, Lord Shiva humbly placed his head at her feet, which are as red as a lotus, to seek her intervention in solving a problem.

73. தாமம் கடம்பு, படைபஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக் கென்றுவைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கொளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோ டிரண்டு நயனங்களே.

தமிழ்ப்பொருளுரை

அபிராமி அன்னையே! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, ஆயுதமோ பஞ்ச பாணங்கள் ,வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ திருவருள் புரியும் கண்கள், செந்நிறமான நான்கு கரங்களைக்கொண்டவள்.  உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற திருநாமமும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Thiripura Sundari, the incomparable beauty of the three worlds, is the name given to the Divine Mother. She has three eyes and four beautiful hands, as well as a radiant reddish complexion and Kadamba flower garlands. Her bow is constructed of five sugarcane stalks, and her arrow is made of sugarcane as well. The best time to worship her is in the middle of the night, when Lord Bhairava himself pays her devotion.

We are graced as her dedicated followers with the divine and sacred lotus of her acquired fortune, given upon us by her grace. Her love and blessings surround us and guide us on our spiritual journey.

74. நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையப்
பயனென்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

தமிழ்ப்பொருளுரை

முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியேயாவாயேயாவாள். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தை விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, தங்க ஆசனமே கிட்டினாலும், அன்னையின் திருவடிச் சேவையையே பெரிதென நினைப்பார்கள்.

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Abhirami is worshipped by  Lord Shiva,the Vedas, Vishnu, and Brahma.
Those who have surrendered to Abhirami's lotus feet would not wish to remain in the Indra loka and enjoy the dances and songs of fine maidens. The verse expresses the belief that by considering her holy feet as the ultimate and most cherished possession, one can attain a blessed and abundant life.

75. தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும், ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திரு மேனி குறித்தவரே.

தமிழ்ப்பொருளுரை

ஈரேழ்புவனத்தையும், பெரிய மலைகளையும்,  கடலையும்,பெற்றெடுத்த அபிராமி அன்னையே! என்றும் நிலையான தாய் நீயே! நறுமணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! அன்னையை  இடைவிடாது சிந்தையிலே தியானிப்பவர் எல்லாவற்றையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலில்  இன்புற்று வாழ்வர். மீண்டும் பிறவியும் இல்லாமல் பெற்றெடுக்கும்  தாயாரும் இல்லாமல் போவர்.

Tamil Meaning: Rajathi. G

English Meaning

Mother! You are responsible for the creation of mountains, oceans and the entire universe represented by the fourteen worlds.

Your beautiful locks of hair adorned with fragrant flowers add to your divine beauty and grace. Devotees who constantly meditate on you are believed to be blessed with the opportunity to reside under the protective and wish-fulfilling shadow of the Karpaga tree, a mythical wish-granting tree , a mythical tree that is said to grant wishes, and will be saved from the circle of birth, death, and rebirth. And in the material world, there will be no need for a mother. As long as you are the mother.

bottom of page