6. வாள்வரி அதள தாடை வரிகோவ ணத்தர்மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவை யோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
பாடல் விளக்கம்
ஒளிரும் வரிகளையுடைய புலித்தோலிலான ஆடையையும் , வரிந்து கட்டிய கோவணத்தையும் அணிந்த எம்பெருமான் அன்றே மலர்ந்த கொன்றை, வன்னி மலர்களையும், கங்கை நதியையும் தன் முடிமேல் சூடிக் கொண்டு, உமையோடு வந்து என் உள்ளத்துள் புகுந்துள்ளான். அதனால்வலிமையான சிங்கம், புலி கொலையானை, பன்றி , கொடிய பாம்பு, கரடி, ஆகியன என் போன்ற அடியவர்க்கு மிக நல்லனவை மட்டுமே செய்யும்.
ENGLISH MEANING
Adorned in a tiger-skin garment with harmonious stripes and a waistband, He adorned His hair with the blossomed flowers of the Vanni, konrai and the sacred Ganges river. He descended into the depths of my heart with mother goddess Uma. Therefore, the mighty tiger with its formidable claws, the venomous serpent, the ferocious wild boar, the powerful elephant, the majestic lion, and other noble creatures will shower only goodness upon dedicated followers like me.
7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
செம்பு போன்ற இள நகில்களை உடைய உமையாளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு ரிஷபத்தின் மேல் ஏறிவரும் செல்வனாகிய எம்பெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் குடிபுகுந்து தங்கியுள்ளான். அதனால் காய்ச்சல், குளிர்காய்ச்சல், வாதம் , மிகுந்த பித்தம் ஆகியவவற்றால் வரும் துன்பங்கள் என் போன்ற அடியவரை வந்தடையாது.
ENGLISH MEANING
Seated on the Bull, with the lovely Uma Devi as His consort, Lord Shiva adorns the Moon and Ganges on His crown, residing within my heart. This is why a devoted individual like me remains unaffected by fever, cold, rheumatism, or excessive bile.
8. வேள்பட விழிசெய் தன்று விடைமேலி ருந்துமடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்த னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்லஅடியா ரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
மன்மதன் அழியும்படி அன்று தன் நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், தன் முடிமேல் ஒளி பொருந்திய சந்திரன், வன்னி, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி, ரிஷபத்தின் மேல் உமையம்மையோடு வந்து, என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் அரசன் இராவணன் போன்றோரின் அகந்தையினால் விளையக்கூடிய இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தாது. ஆழமான கடலும் நமக்கு நல்லனவை மட்டுமே செய்யும்.
ENGLISH MEANING
Opening His third eye in the fervor of Manmatha's destruction, Lord Shiva, embellished with the radiant moon, the aromatic vanni, and konrai flowers, descended upon the Bull's hump, accompanied by Uma Devi. With this divine entrance into my heart, He dispelled all sorrow. His devotees remain unaffected even by individuals as arrogant and egoistic as Ravana, the ruler of Lanka surrounded by the seven oceans. The vast ocean itself will do us good.
9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
பலபல அவத ாரங்களை ஏற்பவரும், உமையொருபாகனாக விளங்குபவரும் ரிஷபத்தை வாகனமாகக் கொண்ட பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கம்பூ ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளார். அதனால் பிரமன், திருமால், வேதங்களை ஓதும் தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலைகடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நம் போன்ற அடியவர்களுக்கு மிக நல்லனவை மட்டுமே செய்யும்.
ENGLISH MEANING
Lord Shiva manifests in various avatars, embraces Mother Uma as his equal in the form of Arthanareeswara, rides the divine bull Rishabha, adorns his hair with the sacred Ganges and fragrant erukampu flowers, and enters into my heart. Consequently, the divine blessings of Brahman, Tirumala, the gods chanting the Vedas, the forces of the future, the vast sea, the towering Meru, and others are exclusively bestowed upon dedicated followers like us.
10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
மலர்க்கொத்துகளை கூந்தலில் அணிந்த உமையம்மையோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், சந்திரன், ஆகியவற்றை அணிந்து என் உள்ளத்தில் புகுந்து தங்கியுள்ளார். பௌத்தர்களையும், சமணர்களையும் ஈசனின் பெருமை மிக்க திருநீறு வாதில் அழிவிக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த திருநீற்றால் என் போன்ற அடியவர்க்கு நன்மை மட்டுமே விளையும்.
ENGLISH MEANING
In the guise of a hunter, Lord Shiva, accompanied by Uma adorned with flower garlands in her hair, bestowed blessings upon Arjuna. He entered my heart, bedecked with datura flowers, the moon, and a snake on his crown. The sanctified ash of Ishan's pride will vanquish followers of Buddhism and Jainism. This magnificent ash holds exclusive benefits for devoted followers of Shiva, such as myself.
சம்பந்தர் பாடிய பதிகங்களில் இறுதிச்செய்யுள் ‘திருக்கடைக்காப்பு’ எனப்படும். இந்த இறுதிச்செய்யுளில் பதிகத்தின் சிறப்பைப் பற்றியும், அப்பதிகத்தை ஓதுபவர்கள் அடையும் பலன்கள் பற்றியும் அவர் குறிப்பிடுவது வழக்கம்.
11.
தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னிவளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்துமறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்துநலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்அரசாள்வர் ஆணை நமதே.
பாடல் விளக்கம்
தேன் நிறைந்த மலர்களையுடைய பூங்காக்களையும், கரும்பும் , செந்நெல்லும் நிறைந்துள்ள, பொற்குவியல்க ள் குவிந்துள்ள, நான்முகன் சிவபெருமானை வழிபட்ட பிரமாபுரம்(சீர்காழி) என்ற ஊரில் தோன்றிய ஞானசம்பந்தனாகிய நான், கர்மவினையால் தாமே வந்து சம்பவிக்கும் , நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
ENGLISH MEANING
I, Gnanasambandan, was born in the city of Brahmpura, where Lord Brahma worshipped Lord Shiva. Brahmpura (Sirkali) boasted honey-filled floral gardens, rice and sugar cane fields, and a glittering metropolis adorned with gold treasures.Ten mantras were sung in order to safeguard the devotees of Lord Shiva.
Aside from the adverse consequences of the Navagrahas, unfavorable days, and various other factors that affect the devotees' welfare.
Undoubtedly, upon unification with the Lord, devotees who sing the hymns contained in this compilation of verses will ascend to the throne of heaven.